சென்னையில் தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த மாண்டஸ் புயல் தற்போது வலுவிழந்து புயலாக உள்ளது: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

சென்னை: மாண்டஸ் புயல் இன்றிரவு முதல் அதிகாலைக்குகள் மாமல்லபுரத்தை ஒட்டி கரைய கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த மாண்டஸ் புயல் தற்போது வலுவிழந்து புயலாக உள்ளது. மாண்டஸ் புயல் தொடர்பாக மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டியளித்து வருகிறார். மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

நாளை சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளனர். வடதமிழக கடலோரத்தில் இன்று மதியம் முதல் மாலை வரை மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று  வீசும் சில சமயத்தில் 70 கி.மீ வேகத்தில் கற்று வீசும் என்று கூறியுள்ளனர். சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 260 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

வட தமிழகத்தின் உள்பகுதிகளில் 10-ம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று கூறியுள்ளனர். சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

புயல் கரையை நெருங்கும் வரை இன்று மாலை முதலே சென்னை சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்யும் கூறியுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூரில் மிக பலத்த மழை பெய்யும் என்று கூறியுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று கூறியுள்ளார். இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை 65-70 கி.மீ வேகத்தில் சில சமயங்களில் 85 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளனர்.  

புயல் கரையை நெருங்கும் வரை இன்று மாலை முதலே சென்னை சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்யும். திருப்பத்தூரில் மிக பலத்த மழை பெய்யும் என்று கூறியுள்ளார். அடுத்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்.  மாண்டஸ் புயல் இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: