முதன்முறையாக ரயில் மூலம் வந்ததால் தொண்டர்கள் உற்சாகம் ஒன்றரை மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மு.க.ஸ்டாலின்-மேளதாளம் முழங்க கட்சியினர் அளித்த வரவேற்பில் நெகிழ்ச்சி

நெல்லை : தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தென்காசி வந்தார். வழக்கமாக வெளியூர் பயணங்கள் என்றால் விமானம் மற்றும் கார் மூலம் செல்லும் முதல்வர் ேநற்று முதன் முறையாக தென்காசிக்கு ரயில் மூலம் வருகை தந்தார்‌. இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரயில் நிலையம் துவங்கி குற்றாலம் வரையும், குற்றாலம் சுற்றுலா மாளிகையில் துவங்கி விழா நடைபெற்ற வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானம் வரையிலும் பல இடங்களில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செண்டை மேளம், வாடிப்பட்டி மேளம்,  கரகாட்டம், ஒயிலாட்டம், குதிரைகள், ராட்சத பலூன் என களை கட்டி காணப்பட்டது. பெண்களும் மாணவ மாணவியரும் குழந்தைகளும் திரண்டு நின்று கொடுத்த வரவேற்பில் நெகழ்ச்சி அடைந்த முதல்வர் விழாவில் பேசும் போது அவற்றை வெளிப்படுத்தினார். கூடியிருந்த கூட்டத்தினரை பார்த்து சாதாரணமாக குற்றாலத்தில் இருந்து மைதானத்திற்கு வருவதற்கு 15 நிமிடங்கள் ஆகும். ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும், வரவேற்பினால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்.

Related Stories: