×

தொழில்நுட்பம் அறிவோம்

SITU Food Scale

SITU என்பது, நாம் சாப்பிடும் உணவின் கலோரி அளவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கிராம்களாகவும், அவுன்ஸ்களாகவும் எடையிட்டு, நம்முடைய ஐபேடிற்கு தகவலை அனுப்பும் ஓர் உணவு அளவுகோல். இதன் மூலம் சாப்பிடுவதற்கு முன்பே நம் முன் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவு ஊட்டச்சத்து மிகுந்ததா அதை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

Gym Watch Sensor


உடலின் ஒவ்வொரு பகுதியிலும் செலவழிக்கப்படும் இயக்கம் மற்றும் வலிமையின் முழு அளவையும் துல்லியமாக அளவிடுவது மட்டும் இதன் வேலையில்லை. பயனர்கள் பயிற்சிகளை ஒழுங்காக செய்வதற்கும், தாங்கள் செய்யும் உடற்பயிற்சிகளிலிருந்து அதிகபட்ச பயன்களை பெறுவதற்குமான தனிப்பட்ட பயிற்சிகளை வழங்குகிறது. IOS மற்றும் Android இரண்டு மொபைல் களிலும், ஒரு இலவச மொபைல் பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இதன்மூலம் 900-க்கும் அதிகமான பயிற்சி களைத் தேர்வு செய்யவும், வழக்கமாக செய்யும் பயிற்சியின் நேரடியான விளைவை அறியவும் முடியும்.

Tags :
× RELATED தொடரும் மாரடைப்பு தற்காப்பது எப்படி?