திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் பிளக்ஸ் புயல், மழை வெள்ளக் காலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை திருவாரூர் வருவாய் கோட்டம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் தெரிவித்துயிருப்பதாவது: தற்போது மாண்டஸ் புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. இச்சமயத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருப்பது அவசியம். குறிப்பாக கூரை வீடுகளிலும், தண்ணீர் சுவரில் ஒழுகும் மாடி வீடுகளிலும் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மின்சாதனங்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.

குழந்தைகளை மின் சுவிட்ச் அருகில் விடக்கூடாது. கால் நடைகளை மின்கம்பத்தில் கட்டகூடாது, அறுந்து இடக்கும் மின்கம்பியை தொடக்கூடாது, கல்வி சான்றுகள், நில ஆவணங்கள், முக்கிய ஆவணங்கள், ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வங்கி ஆவணங்கள், பணம், தங்க நகை போன்றவற்றை நீர்புகாதவாறு பிளாஸ்டிக் பைகளில் பாதுகாக்க வேண்டும், உணவு தயாரிக்க தலையான பொருட்கள், மருந்து, மாத்திரைகள் மற்றும் மாத மாத்திரைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

டார்ச்லைட், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி வலி தைலங்களை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும், உண்மையான வானிலை அறிவிப்புகளை அறிந்து செயல்பட வேண்டும். வதந்திகளை நம்பவேண்டாம், குழந்தைகள், நோயாளிகள், மாற்றுதிறனாளிகள், வயதானோர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், அல்லது முகாம்களில் உணவு, சுகாதாரம், கழிவறை, மின்சாரம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், பேரிடர் பாதிப்புகளை தொடர்ந்து அரசு துறைகளுக்கு தெரிவிக்க வேண்டும். இடிமின்னலின் போது உயர்ந்த மரங்கள், வெட்டவெளியில் நிற்பதும், இரும்பு பொருட்களின் அருகிலும் நிற்க கூடாது, தண்ணீர் அதிகம் செல்லும் நீர்நிலை அருகில் செல்லவோ செல்பி எடுக்கவோ வேண்டாம், இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் பேரிடரை சமாளிக்க முடியும் போன்றவை உள்ளது.

Related Stories: