தேங்காய் எண்ணையில் குளியல் சோப்பு தயாரித்து அசத்தும் கூட்டுறவு விற்பனை சங்கம்: இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் மக்களிடம் வரவேற்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 92 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமையான வேளாண் கூட்டுறவு சங்கம் புதிய முயற்சியாக தேங்காய் எண்ணையில் குளியல் சோப்பு தயாரித்து விற்பனை செய்வது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. திருச்செங்கோட்டில் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 90 ஆண்டுகளை கடந்தும் சிறப்பாக செயல்பட்டு வருவது கவனம் பெற்றுள்ளது.

இங்கு விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி, எள், கொப்பரை தேங்காய், மஞ்சள், சோளம் போன்ற விலை பொருட்கள் ஏலத்தின் மூலம் சந்தைப்படுத்தப்பட்டுகிறது. இவைகளில் புதிய முயற்சியாக குளியல் சோப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கஸ்தூரி மஞ்சள், கற்றாழை, ரோஜா, வேம்பு என 6 வகையான சோப்புகளை இயந்திரங்கள் ஏதுமின்றி கைகளால் தயாரிப்பது இதன் கூடுதல் சிறப்பு.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் ஏதுமின்றி இயற்கையான முறையில் உற்பத்தி செய்யும் இவர்களில் குளியல் சோப்பிற்கு  பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால், உற்பத்தி தொடங்கி 4 மாதங்களில் உற்பத்தி மாதாந்திர விற்பனை 75,000 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு நியாயவிலை கடைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

குளியல் சோப்பு தயாரிப்பு மட்டுமின்றி அவற்றை தயாரிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலமாக பயிற்சியை வழங்குகின்றனர். கூட்டுறவே நாட்டு உயர்வு என்று சொல்லுக்கு அர்த்தமாய் விளங்கும் இந்த கூட்டுறவு சங்கம் சிறந்த செயல்பாட்டிற்காக மாநில, ஒன்றிய அரசுகளில் விருதுகளையும் பெற்றுள்ளது.  

Related Stories: