மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயலாக புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாநகரில் மட்டும் இரவு நேர பேருந்துகள் 603 வழித்தடங்களில் 550 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 550 மாநகர பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து ஈசிஆர் வழியாக பாண்டிச்சேரி வழியாக மற்ற ஊர்களுக்கு கடற்கரையை ஒட்டிய செல்லும் அனைத்து பேருந்துகளும் மாற்று வழிகளில் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். புயல் கரையை கடக்கும் போது கடற்கரை சாலைகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது எனவும்,

அதற்கு பதிலாக சென்னையில் இருந்து புதுவை, நாகை, சிதம்பரம், வேளாங்கண்ணி, கடலூர், மயிலாடுதுறை கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் திண்டிவனம் சென்று அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடக்கும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், பின்பும் பேருந்துகள் இயங்காது. கிழக்கு கடற்கரை சாலையில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: