அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு

டெல்லி : அதிமுக பொதுக்குழுவை செல்லாது ஏன் கோரி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் அதை எதிர்த்து இந்த மனு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதி மன்றம் விசாரணை மேற்கொண்ட போது அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முடிவு வரும் வரை தேர்தலை நடத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளரான வைரமுத்து தரப்பில் வழக்கை ஒத்திவைக்க கால அவகாசம் கோரியிருந்தார். இதனையேற்று தற்போது வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இபிஎஸ் தரப்பில் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் கோரியிருந்தனர்.

அதனையேற்ற உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்ய அனுமதியளித்தது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பிற்கு மனுவானது வழங்கப்பட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தர்தல் நடக்கும் நேரத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும், கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க வேண்டும் என இடைக்கால மனுவில் கோரியுள்ளனர்.

     

Related Stories: