சிறு விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலையை தனியார் தொழிற்சாலைகள் வாங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் சிறு விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலையை பெற்றுக் கொள்ளவும், குறைந்தபட்ச விலையாக ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இவர்கள் தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலையை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

பெரும்பாலான பகுதிகளில் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கே விவசாயிகள் வழங்கி வருகின்றனர். இவர்கள் வைத்துள்ள தேயிலை தோட்டங்களில் பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் பழமையானவை. அதில் கிடைக்கும் பசுந்ேதயிலையை பறித்தே தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். ஆனால், தற்போது இவர்கள் வழங்கும் பசுந்தேயிலை தரமானதாக இல்லை என பல தொழிற்சாலைகள் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால், சிறு விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தனியார் தேயிலை தொழிற்சாலைகள் போன்று கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும் சிறு விவசாயிகள் அளிக்கும் தேயிலையை வாங்க மறுத்தால், விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வழங்கும் தேயிலையை அனைத்து தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் வாங்க வேண்டும். மேலும், பசுந்தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ.30 வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன், மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் போஜன் ஆகியோர் தலைமையில் நேற்று விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டரை சந்தித்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் விவசாயிகள் அளிக்கும் பசுந்தேயிலையை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். மேலும், இது தொடர்பான மனுவையும் கலெக்டரிடம் அளித்தனர்.மஞ்சூர்:  பச்சை தேயிலையின் விலை வீழ்ச்சியால் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளைமறுநாள்(11ம் தேதி) எடக்காடு பகுதியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பல ஆயிரம் ஹெக்டரில் தேயிலை சாகுபடி செய்து வருகிறார்கள்.

தேயிலை விவசாயிகள், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சாலையினர், விற்பனையாளர்கள் என பல தரப்பை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தேயிலை தொழிலை சார்ந்துள்ளனர். இந்நிைலயில் தேயிலை விவசாயித்தில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் கடநத பல ஆண்டுகளாகவே விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட குடும்ப ஜீவிதம் மட்டுமின்றி குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவ செலவீனங்கள் உள்பட அனைத்தும் தேயிலை விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளதால் அதில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.

இதை தொடர்ந்து பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தேயிலை விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் பச்சை தேயிலை விலை வீழ்ச்சி குறித்தும் அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் போஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பச்சை தேயிலை விலை வீழ்ச்சி குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் 11ம் தேதி எடக்காடு பகுதியில் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், சிறு தேயிலை விவசாயிகள், கூட்டுறவு தேயிைல தொழிற்சாலை முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கூட்டத்தில் தீர்மானிக்கப் படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: