ஈரோடு கால்நடை சந்தையில் 90% மாடுகள் விற்பனை

ஈரோடு :  ஈரோடு கால்நடை சந்தையில் நேற்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையாகின.ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது.

இதில், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான விலை மதிப்பில் 100 கன்றுகள், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையிலான விலை மதிப்பில் 300 எருமைகள், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான விலை மதிப்பில் 350 பசுமாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.இவற்றை வாங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர். கோமாரி நோய் தாக்கத்தால் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடை சந்தைகள் மூடப்பட்டிருந்தன.

தற்போது அங்கு நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, தனியார் கால்நடை சந்தைகள் மட்டும் கடந்த வாரம் முதல் செயல்பட தொடங்கியுள்ளன. இதனால், கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவிலான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகள் வாங்க வந்திருந்தனர். நேற்று சந்தைக்கு கொண்டு வரப்பட்டிருந்த மாடுகளில் 90 சதவீதம் மாடுகள் விற்பனையாகின.

Related Stories: