கொடைக்கானலில் பலத்த காற்று வீசுவதால் முறிந்து விழும் ராட்சத மரங்கள்: சுற்றுலா தலங்கள் மூடல்

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டாஸ் புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசப்பட்டு வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. குறிப்பாக, கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் நேற்று இரவு 10-க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மழை குறைந்த பிறகே சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முக்கிய சுற்றுலா தலமாக இருக்கக்கூடிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடையானது விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலத்த காற்றானது கொடைக்கானல் மலை பகுதி முழுவதுமாக வீசி வருவதால் பொதுமக்கள் நடமாட்டமும் தற்போது குறைந்திருக்கிறது. பிரதான சாலையில் விழுந்துள்ள மரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா தளத்திற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.   

Related Stories: