மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்..!!

மதுரை: மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்து பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மதுரையில் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரை வந்திருந்தார். தற்போது தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை மதுரை மாநகராட்சியில் உள்ள வளாகத்தில் தொடங்கி வைத்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற மண்டலம் 6, மதுரை மாநகராட்சியில் இருக்கின்ற மண்டலம் 3, பொள்ளாச்சி, புதுக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகிய பேரூராட்சிகளில் முதற்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பின்னர் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுடைய நல வாழ்வுக்கான திட்டங்கள் குறித்த கள ஆய்வுகளை மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான பாதுகாப்புகளை உறுதி செய்தல், அவர்கள் குழந்தைகளுக்கு முறையான கல்வியினை கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள், பாதுகாப்பு உறுதி செய்தல். தூய்மைப் பணிக்கான இயந்திரங்களை இயக்க திறன் பயிற்சி அளித்தல் ஆகியவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார். தூய்மைப் பணியாளர்கள் நலனில் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது இந்த திட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories: