×

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்கள் ரத்து...!

சென்னை: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையத்தில் 7  பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாண்டஸ் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.இந்நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதிகாலை சென்னையில் இருந்து கொழும்பு செல்ல இருந்த ரத்து செய்யப்பட்டது. மேலும் காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து கடப்பா செல்லும் இண்டிகோ ஏர் லைன்ஸ் விமானம், இரவு 9.15 மணிக்கு மும்பை செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு சென்னை வர இருந்த ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை 9.35 மணிக்கு வர இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.50 மணிக்கு கடப்பாவில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்று மற்றும் மழையின் வேகத்தை பொறுத்து மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Mandus ,Chennai airport , Mandus storm reverberates: 7 passenger flights canceled at Chennai airport...!
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...