சென்னையில் இருந்து 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்!: மெரினாவில் கடல் சீற்றம் அதிகரிப்பு.. கரையை தாண்டி ஆக்ரோஷமாக எழும் அலைகள்..!!

சென்னை: சென்னையை மாண்டஸ் புயல் நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வரும் நிலையில் இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கூடும். மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 65 முதல் 70 கி.மீ. வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மெரினாவில் கடல் சீற்றம்:

சென்னை மெரினாவில் கடல் சீற்றம் காரணமாக கரையை தாண்டி அலைகள் வந்து செல்கின்றன. கடல் சீற்றத்தை அடுத்து மெரினா கடற்கரை முழுவதுமாக மூடப்பட்டது; பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். புயல் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் ரயில் இன்று காலை 10 மணிக்கு பதிலாக மதியம் 1.30க்கு புறப்படுகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் மாண்டஸ்:

தீவிர புயலாக உள்ள மாண்டஸ் இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

புயலின் வேகம் 12லிருந்து 13 கி.மீ. ஆக அதிகரிப்பு:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 12லிருந்து 13 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கி.மீ. வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: