×

புதிய முதலமைச்சரை தேர்தெடுக்க இமாச்சலப் பிரதேசத்தில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சிம்லாவில் நடைபெறுகிறது..!

சிம்லா: புதிய முதலமைச்சரை தேர்தெடுக்க இமாச்சலப் பிரதேசத்தில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சிம்லாவில் நடக்கிறது. முதலமைச்சர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இமாச்சல் மாநில பொறுப்பாளர்களான சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பரகேல், பூபிந்தர் ஹீடா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம்  நடைபெறும். 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர்.  

68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கியது. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.

இதில் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை பெற்று வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களை பெற்றுள்ளது. சுயேட்சை கட்சிகள் 3 இடங்களை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றததை தொடர்ந்து, காங்கிரசார் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சரவெடிகளை வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி யார்? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் சிம்லாவில் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காங்கிரஸ் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் சூழலில், பிரியங்கா காந்தி இமாச்சல் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தேர்தல் வெற்றிக்கான புகழ் பிரியங்காவையே சேரும் என்று உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் பெருமிதத்தோடு தெரிவிக்கின்றனர்


Tags : Himachal Pradesh ,Congress ,Chief Minister ,PA ,shimla , New Chief Minister, Himachal Pradesh, Congress, MLAs meeting, Shimla
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...