மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை; மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. அடுத்து 3 மணி நேரத்தில் தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக மாண்டஸ் வலுவிழக்கக்கூடும் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மகாபலிபுரத்தையொட்டி கரையை கடக்கும். இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: