பாமக கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: தைலாபுரத்தில் இன்று  நடைபெற இருந்த 7 மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டங்கள் புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. பாமக வளர்ச்சிப் பணிகள் குறித்து  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர்,  மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடனான கலந்தாய்வு  தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் (இன்று) 9.12.2022 வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாண்டஸ் புயல் வடமாவட்டங்களை இன்று  தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் இன்று  நடைபெற இருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: