இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி  பெற்றிருக்கும் நம்பிக்கையூட்டும் வெற்றிக்காக காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள், தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைபற்றி ஆட்சியை பிடித்துள்ளது.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில்: இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் நம்பிக்கையூட்டும் வெற்றிக்காகக் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இமாச்சலப் பிரதேச மக்களின் நல் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற விழைகிறேன். இவ்வாறு முதல்வர் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.

Related Stories: