நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் 85ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை

நாகப்பட்டினம்: வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று அதிகாலை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. 100 அடிக்கு உள்வாங்கிய கடல் நீர்: வேதாரண்யத்தில் திடீரென கடல் 100 அடி உள்வாங்கி உள்ளது. மேலும் கடலில் மிக பெரிய அலைகள் உருவாகி சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் உள்வாங்கியதால், காற்று, மழை அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Related Stories: