வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: 3 வாலிபர்கள் கைது

துரைப்பாக்கம்: சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பத்மினி (35). இவரது மைத்துனி சாவித்திரி (34) பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. சாவித்திரிக்கு 13 வயதில் மகள் உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூன்று பேரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேர் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், இதை தடுக்க முயன்ற சிறுமியிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறினர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இதை பார்த்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். புகாரின்பேரில், செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (25), அசோக் (22), நெஸ்லி (19) ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு  பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தப்பி ஓடியது தெரிய வந்தது.  இதையடுத்து, 3 பேரையும் போக்சோ பிரிவில் நேற்று கைது செய்தனர். பிறகு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: