திரிணாமுல் எம்எல்ஏவின் ரூ.7.93கோடி முடக்கம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவின் வைப்புத் தொகை ₹7.93கோடி மற்றும் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக  நடியா மாவட்டத்தில் உள்ள பலஷிபாரா தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மாணிக் பட்டாசார்யா கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் மாணிக்கின் வங்கி கணக்கு மற்றும் ₹7.93 கோடி வைப்புத்தொகை உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். மாணிக்கின் நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 61 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Related Stories: