மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியா-ஆஸி மோதல்

மும்பை: மகளிர் டி20 உலக கோப்பை  தென் ஆப்ரிக்காவில்  பிப்.10ம் தேதி முதல் பிப்.26ம் தேதி வரை நடைபெறும். அதற்கு முன்னோட்டமாக  போட்டியில் பங்கேற்க உள்ள மகளிர் அணிகள் பயிற்சிக்காக,  இப்போது சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்நிலையில்  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா மகளிர் அணி 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் இன்று இரவு 7.00 மணிக்கு  மும்பையில் தொடங்குகிறது. எஞ்சிய 4 ஆட்டங்கள் முறையே டிச. 9. 11. 14, 17, 20 தேதிகளில் நடக்கும்.

இந்த 5 ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்கள் மும்பையின் பாட்டீல் அரங்கிலும், எஞ்சிய 3 ஆட்டங்கள் மும்பையின்  பிராபோர்ன் அரங்கிலும் நடைபெறும். ஹர்மன்பிரீத் தலைமையிலா இந்திய அணியில் மந்தானா, ஷாபாலி, தீப்தி, ஜெமீமா, யாஸ்டிகா, ரிச்சா, ராஜேஸ்வரி, அஞ்சலி, ரேணுகா, ராதா,  மேக்னா. ஹர்லீன், தேவிகா, சாப்பினேனி ஆகியார் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் அலிஸ்ஸா தலைமையிலான  ஆஸி  அணியில்  தஹிலா, ஆஷ்லி, கிம், போபே, எல்லீஸ், நிகோலா, அன்னபெல், பெத், டார்சி, ஹீதர், கிரேஸ், ஜெஸ், ஆலானா, மேகன் ஆகியோர் விளையாட உள்ளனர்.

Related Stories: