பொதுவெளியில் மரண தண்டனை; கொலை செய்யப்பட்டவரின் தந்தையே சுட்டுக் கொன்றார்.! தலிபான் ஆட்சியில் அதிரடி

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு முதல்முதலாக பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தஜ்மீர் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. அவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுவெளியில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலையுண்டவரின் தந்தை தஜ்மீரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இது கடந்தகால தலிபான் ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: