சொல்லிட்டாங்க...

இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்திற்கு வரவேண்டும். இதுதான் என்னுடைய லட்சியம், குறிக்கோள். அதை எதிர்நோக்கி நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம். - முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெற்று வாக்குறுதிகள், இலவசங்கள் போன்ற அரசியல் செய்பவர்களை குஜராத் நிராகரித்தது. - உள்துறை அமைச்சர் அமித்ஷா

குஜராத் தேர்தல் முடிவு நாட்டின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. டெல்லி உள்ளாட்சி, இமாச்சல் தேர்தல் முடிவுகள் பாஜ தோற்கடிக்கப்பட்டதை நிரூபிக்கின்றன. - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

தமிழை ஒரு பாடமாக படிக்காமல் பொறியியல் படிப்பை நிறைவு செய்ய முடியாது என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: