×

மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் நாளை (09.12.2022)காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது

சென்னை: மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் நாளை (09.12.2022)காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புயலானது மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி அறிவுரையின்படியும், நிருவாகத்துறை மாண்புமிகு அமைச்சர் மேயர் கே.என்.நேரு, ஆர்.பிரியா ஆலோசனையின்படியும் முதன்மை செயலாளர் / ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இன்று (09.12.2022) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளையும், மரக்கிளைகளை அகற்ற தேவையான மர அறுவை இயந்திரங்களையும், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த ஜே.சியி. டிப்பர் லாரிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், மழைப்பொழிவின் போது சுரங்கப்பாதைகளில் உடனடியாக மோட்டார் பம்புகளை இயக்கி மழைநீரை வெளியேற்றவும் மாநகராட்சியின் சார்பில் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றவும், அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள விளம்பர உடனடியாக பலகைகளின் உறுதித் தன்னையினை ஆய்வு செய்து தேவைப்படின் மக்களின் பாதுகாப்பு கருதி அவற்றை அகற்றவும், கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தகடுகள் போன்ற இலகுவான பொருட்களை கட்டி பாதுகாப்பான இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையும், காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். காற்றின் அதிக வேகத்தின் காரணமாக மரம் மற்றும் மரக்கிளைகள் சாய்ந்து விழக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியின் அனைத்துப் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நாளை (09122022) காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை தெரிவித்துள்ளார்.

மூடப்படுவதாக ஆணையாளர் எனவே, பொதுமக்கள் பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், மாண்டஸ் புயலின் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும், பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (சுகாதாரம் ) சங்கர்லால் குமாவத், துணை ஆணையாளர் (பணிகள்) எம்.எஸ்.பிரசாந்த், துணை ஆணையாளர் (கல்வி) டி. சினேகா, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : Cyclone Mandus ,Chennai Municipal Parks ,Playgrounds , Due to Cyclone Mantus, Chennai Municipal Parks and Playgrounds will remain closed from tomorrow (09.12.2022) morning until further notice.
× RELATED மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 200 இருளர் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள்