சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: நாளை, 12ம் தேதி 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில்  தினமும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் மண்டல பூஜை நெருங்கி வருகிறது. ஆகவே பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து உள்ளது. நாளை (9ம் தேதி) தரிசனத்திற்காக 1 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

இந்த மண்டல சீசனில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும். இதே போல் வரும் 12ம் தேதியும் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

கிறிஸ்துமஸ் விடுமுறை நெருங்கி வருவதால் வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதன்படி இன்று தரிசனத்திற்காக இதுவரை 93,600க்கும் அதிகமான பக்தர்களும், நாளை (10ம் தேதி) 91 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் முன்பதிவு செய்து உள்ளனர். பக்தர்கள் வருகை எவ்வளவு அதிகரித்தாலும் எளிதில் தரிசனம் செய்து திரும்பும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்து உள்ளார்.

Related Stories: