×

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான மேலும் 3 பேருக்கு டிசம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான மேலும் 3 பேருக்கு டிசம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லியில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது.  22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்த நிலையில் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 4 மணிஅளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்தக் காரை ஒட்டி வந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் காவல்துறை விசாரித்து வந்ததது.

இந்நிலையில் கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஜமேஷா உயிரிழந்த முபின் வீட்டிலில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடி மருந்துகளும் சிக்கின.

மேலும் இது தொடர்பாக சென்னை, கோவை, திருப்பூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.

கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு டிசம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லியில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது.  22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்த நிலையில் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  



Tags : Poonthamalli ,Special Court ,Govai , 3 more arrested in Coimbatore car cylinder blast case remand till December 22: Poontamalli special court orders
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...