ஐரோப்பிய நாடுகளிலிருந்து குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள குமரியில் தஞ்சம் அடைந்துள்ள ரோசி ஸ்டார்லிங் பறவைகள்

கன்னியாகுமரி: குளிரிலிருந்து தற்காத்து கொள்ளவும், இரைதேடியும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல்லாயிரம் தூரம் பறந்து குமாரி மாவட்ட மரக்குடி காயலில் உள்ள மாங்குரோர் காட்டில் தஞ்சம் அடைந்துள்ளது ரோஸி ஸ்டார்லிங் பறவைகள். மணல்குடி கடல் பகுதிகளில் பலையாறு கடலுடன் சேரும் இடத்தில் உள்ளது காயல். மாங்குரோ செடிகள் அதிகளவில் வளர்ந்து காடு போன்று காட்சியளிக்கும் இந்த இடம் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு புகழிடமாக உள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து வந்த 30,000-க்கும் மேற்பட்ட ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் இங்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இவை இரைதேடி அதிகாலை வேளையில் கூட்டம் கூட்டமாக வானில் பறந்து செல்வதும், அந்திசாயும் வேளையில் மீண்டும் மணக்குடி காயலுக்கு திரும்புவதும் காண்போரை ரசிக்க வைக்கிறது. ரோஸி ஸ்டார்லிங் பறவைகல் கடல் அலை போல் வானில் அலை அலையாக மேலும் கீழும் பறந்து செல்லும் காட்சிகளை அப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.  

Related Stories: