ரொனால்டோவை நீக்கியது மிகப்பெரிய அவமானம்: காதலி குமுறல்

தோகா: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடந்த ரவுன்ட் ஆப் 16 சுற்று போட்டியில் போர்ச்சுகல் 6-1 என்ற கோல் கணக்கில், சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 37 வயதான அவருக்கு இது தான் கடைசி உலக கோப்பை தொடராகும். இந்நிலையில் பயிற்சியாளர் பெர்னாண்டோசான்டோசின், ெரானால்டோவை களத்தில் இறக்காமல் பெஞ்சில் உட்கார வைத்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனிடையே ரொனால்டோவுக்கு வாய்ப்பு அளிக்காததால் அவரின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வாழ்த்துக்கள் போர்ச்சுகல். 11 வீரர்கள் தேசிய கீதம் பாடும்போது அனைவரது பார்வையும் உங்கள் மீதுதான் இருந்தது. உலகின் தலைசிறந்த வீரரை 90 நிமிடங்கள் ரசிக்க முடியாமல் போனது என்ன அவமானம். ரசிகர்கள் ரொனால்டோவை கேட்பதையும் அவரது பெயரைச் சொல்லி கத்துவதையும் நிறுத்தவில்லை. கடவுளும் பெர்னாண்டோவும் சேர்ந்து இதேபோல் இன்னொரு போட்டியிலும் இதே அதிர்ச்சியை எங்களுக்கு தரட்டும், என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: