மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி: டிச. 10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு டிச.17ல் நடைபெறும் என அறிவிப்பு..!!

சென்னை: டிசம்பர் 10ல் நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 17ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுதியான மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாண்டஸ் புயல் எதிரொலியாக ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 17ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இப்போது தான் புயல் உருவாகி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 85 கிமீ வரையிலும் கூட காற்று வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: