முட்டை மஞ்சூரியன்

செய்முறை  :

குடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 1 ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். பின்னர் சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகாய் தூள், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும். இரண்டும் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து குடைமிளகாயை போட்டு வதக்கவும். அடுத்து சில்லி சாஸ், tomato ketchup, சோயா சாஸ் போட்டு நன்றாக கிளறவும். அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

Related Stories: