வண்டலூர் பூங்காவில் யானைகளின் இருப்பிடம் புனரமைப்பு: யானைகள் குளித்து மகிழ பிரத்யேக நீச்சல் குளம்

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகளுக்கான பிரத்யேக நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 21 ஏக்கர் பரப்பளவில் யானைகள் இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது ரோகிணி, பிரக்ருதி ஆகிய இரண்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

யானைகள் இருப்பிட கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணி தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வந்தது.  யானைகளுக்கான சமையல் செய்ய பிரத்யேக பகுதி, பராமரிப்பாளர்கள் தங்குமிடம், யானைகள் குளிக்க வசதியாக நீச்சல் குளம் ஆகியவை கட்டப்பட்டு வந்தன. இந்த பணிகள் நிறைவுற்றதை அடுத்து பூங்கா இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி அவற்றை திறந்து வைத்தார். நீச்சல் குளத்தை வண்டலூர் பூங்காவில் உள்ள யானைகள் இரண்டும் விளையாடி மகிழ்ந்தனர்.

யானைகளின் இருப்பிடத்தில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு அகழி ஆழ்படுத்தப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் யானைகளுக்கான தீவின தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வந்து இருந்த பார்வையாளர்கள் யானைகளின் இருப்பிடத்தை கண்டு ரசித்தனர்.    

Related Stories: