ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஏகாந்த ராமசுவாமி கோயிலில் திருடப்பட்ட நடனக் கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!!

வாஷிங்டன்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஏகாந்த ராமசுவாமி கோயிலில் திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து திருடுபோன பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு, சிலைகளை மீட்கும் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், 1966ல் திருடப்பட்ட நடனக் கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.  நடமாடும் கிருஷ்ணர் சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்திருக்கிறது.

தங்கச்சிமடம் ஏகாந்த ராமசுவாமி கோயிலில் நடமாடும் கிருஷ்ணர் உள்பட 6 சிலைகள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, 1.நடனக் கிருஷ்ணர், 2.விஷ்ணு, 3.ஸ்ரீதேவி, 4.பூதேவி, 5.பூதேவி மற்றும் 6 விஷ்ணு சிலைகள் திருடப்பட்டன. இதில் நடனக் கிருஷ்ணர் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக கோயில்களில் அதாவது, திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் திருடப்பட்ட தேவி, விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories: