சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: குஜராத்தில் 136 தொகுதிகளில் பாஜக முன்னிலை: இமாச்சலப் பிரதேசத்தில் 36 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

அகமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1 மற்றும் டிச.5ம் தேதிகளிலும், 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு நவ.12ம் தேதியுடம் தேர்தல் நடந்து முடிந்தது. இமாச்சலில் 76.44% வாக்குகளும்,  குஜராத்தில் முதல்கட்ட தேர்தலில் 63.31%  வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 65.22%  வாக்குகளும் பதிவாகி இருந்தன. இரண்டு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இமாச்சலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் 9 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 136 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல இமாச்சலில் காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பாஜக 32 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 0 இடங்களிலும் மற்றவை 0 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பகல் 12 மணிக்குள் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவரம் தெரிய வரும். கருத்துக்கணிப்புகளில் குஜராத்தில் மீண்டும் பா.ஜ ஆட்சி அமைக்கும் என்றும், இமாச்சலபிரதேசத்தில் இழுபறி நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: