வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்'புயலாக வலுப்பெற்றது

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாண்டஸ் புயலானது புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. புயல் காரணமாக நாளை நள்ளிரவு முதல் காற்றின் வேகம் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது. வட தமிழ்நாடு, வட கடலோர மாவட்டங்கள், வட உள்தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து நேற்றிரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. புயல் உருவானதை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. டிசம்பர்-10 ஆம் தேதி வரை மீனவர்கள் முற்றிலும் கடலுக்கு செல்லக்கூடாது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: