நெடுஞ்சாலைத்துறை அகற்றும் வீடுகளுக்கு மாற்று குடியிருப்புகள் கோரி கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகரில் நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்ற உள்ள வீடுகளுக்கு இழப்பீடு மற்றும் மாற்று குடியிருப்பு வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகர் 7வது தெரு மற்றும் 8வது தெருக்களில் உள்ள வீடுகளை சாலை விரிவாக்க பணிக்காக அகற்ற உள்ளதாக, நெடுஞ்சாலை துறை சார்பில்  அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 9ம்தேதி நெடுஞ்சாலை துறை சார்பில் வீடுகளை அகற்ற உள்ளனர். அங்குள்ள 16 குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று குடியிருப்பு வழங்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநில குழு உறுப்பினர் ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, ரவீந்திரநாத் கூறுகையில், ‘‘துரைப்பாக்கம் அறிஞர் அண்ணா நகர் 7வது மற்றும் 8வது தெருவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, வரும் 9ம் தேதி வீடுகளை சாலை விரிவாக்க பணிக்காக  அகற்ற உள்ளதாக நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.  இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இங்குள்ள 16 குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: