நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி

திருமலை: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா(20). இவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சசிகலா வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர்- ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி துவ்வாடாவிற்கு நேற்று காலை வந்துள்ளார். துவ்வாடா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது ​​ரயில் நிற்பதற்குள் சகிகலா இறங்க முயன்றுள்ளார். அப்போது, கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் விழுந்து சிக்கிக் கொண்டார். உடனே, ரயில் நிறுத்தப்பட்டது. அவரது கால் தண்டவாளத்தில் சிக்கியதால் படுகாயமடைந்து வெளியே வரமுடியாமல் தவித்தார். ரயில்வே மீட்பு படையினர், நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து சுமார்  1.30 மணிநேரம் போராடி மாணவி சசிகலாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: