ராகி பக்கோடா

எப்படிச் செய்வது?

பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இத்துடன் ராகி மாவு, சோள மாவு, கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு (ஏதாவது ஒன்று) சேர்க்கவும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்தூள், சூடான 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். இத்துடன் பொடித்த வேர்க்கடலை சேர்த்து பிசைந்து உதிர் உதிராக மாவு இருக்க வேண்டும். (பக்கோடா பதத்தில்) எண்ணெயை காயவைத்து கலந்து வைத்துள்ள மாவை பக்கோடாவாக பொரித்து எடுக்கவும். ராகி பக்கோடா கரகரப்பாக இருக்கும். வேர்க்கடலைக்கு பதில் முந்திரிப் பருப்பும் சேர்க்கலாம்.

Related Stories: