கவர்னர் மாளிகை முன் 29ம் தேதி முற்றுகை: முத்தரசன் பேட்டி

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு வந்த, மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இதனை நான் ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால், அமித்ஷா போன்றோர் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காசியில் நடக்கும் தமிழ் சங்க விழாவில், தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழை புகழ்ந்து பேசிய மோடியை வரவேற்கிறேன்.

ஆனால் கடந்த பாஜ ஆட்சியில், சமஸ்கிருதத்திற்கு ₹222 கோடி ஒதுக்கி விட்டு, தமிழுக்கு ₹22 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, ஆளுநர்  கிடப்பில் போட்டுள்ளார். எனவே, தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வரும் 29ம்தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது, என்றார்.

Related Stories: