ஜனநாயகத்தில் தேர்தலுக்கான புனிதத்தை தடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ஜனநாயகத்தில் தேர்தலுக்கென இருக்கும் புனித தன்மையை, அதன் செயல்முறையை தடுத்து நிறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் சதார் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு 2 நாட்கள் முன்னதாக, மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்காக வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டனர். காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் அவர்களால் வாக்களிக்க போக முடியவில்லை,’’ என்று  வழக்கறிஞர் ஒருவர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.  

இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோஹ்லி  அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ``ஜனநாயகத்தில் தேர்தலுக்கு என  புனித தன்மை உள்ளது. அதன் செயல்முறையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது,’’என்று நீதிபதிகள் வழக்கறிஞரிடம் கூறினர். பின்னர் தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை நாள் குறித்து வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை மீண்டும் வியாழன் (இன்று) காலை அவசரப் பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

Related Stories: