விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 20 டாஸ்மாக் ஊழியர்கள் இடமாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன்.  இங்கு விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பிராந்தி பாட்டில்களுக்கு குவாட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையும் பீர்பாட்டில்களுக்கு ரூ.10 வரை கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக சோதனை நடத்த மேலாண் இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான குழுவினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பல்வேறு கடைகளில் நடைபெற்ற சோதனையில் 20 கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து 20 விற்பனையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனையில் சிக்கிய விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் தற்காலிகமாக மாற்றுக்கடையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட மேலாளர் கூறுகையில், ‘’எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் நடந்த சோதனையில் சுமார் 20 ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: