×

பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கை என்பதற்காக கைகளை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது: பண மதிப்பிழப்பு வழக்கில் நீதிபதிகள் காட்டம்

டெல்லி: ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு முடிவினை உச்சநீதிமன்றம் எப்போது வேண்டும் என்றாலும் ஆராயும் என்று கூறிய நீதிபதி, பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கை என்பதற்காக கைகளை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடந்துள்ளனர். அவ்வாறு தொடரப்பட்ட 58 வழக்குகளை நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், டிஆர் காவி, ஏ.எஸ்.கோபண்ணா, டி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது வருகிறது.

நேற்றைய விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் பணமதிப்பிழப்பு காலத்தில், குறிப்பாக வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதாக முறையிட்டார்.

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா உழைத்து சம்பாதித்த பணத்தை யாரும் இழக்காமல் இருபப்தை உறுதி செய்வதற்காக ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்களுக்கு போதுமான மற்றும் நியாமான வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி பி.வி.நாகரத்னா: பணமதிப்பிழப்பு என்பது ஒன்றிய அரசின் பொருளாதார ரீதியிலான முடிவு என்பதால் நீதிபதிகள் கைகளை கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவோம் என்பது அர்த்தம் ஆகாது என்று விமர்சித்தார். அரசு எந்த சூழல்களின் அடிப்படையில் பணமதிப்பிழப்பு முடிவை எடுத்தது என்பதை எப்போது வேண்டுமென்றாலும் உட்சநீதிமன்றம் ஆராயும் என்று நீதிபதி பி.வி.நாகரத்னாகூறினார்.


Tags : Economic activity, currency devaluation case, Judges Gaddam
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு