மனிதாபிமானத்தில் மனிதர்களை மிஞ்சும் 5 அறிவு ஜீவன் ஆட்டு குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்

*தா.பழூர் அருகே நெகிழ்ச்சி

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கீழக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி முத்துலட்சுமி உடல்நல குறைவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் சேகர் பிறந்ததிலிருந்து செவித்திறன் குறைபாடு வாய் பேச முடியாதவர். இதனால் வெளியில் எந்த கூலி வேலைக்கும் செல்ல முடியாத நிலை. ஆகையால் தான் உயிர் வாழ ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக. அவர் வீட்டில் ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார். தற்பொழுது 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் அவருக்கு யாரும் ஆதரவு இல்லாத நிலையில் ஆதரவாக மூன்று நாய்களையும் வளர்த்து வருகிறார்.

தனக்கு வருமானம் இல்லாத காரணத்தால் அரசு சார்பில் வழங்கப்படும் ஊனமுற்றோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 வாங்கி வருகிறார். இந்த தொகையை வைத்து தனது அத்தியாவசிய தேவைகள் சிலவற்றை நிவர்த்தி செய்து கொள்கிறார். ஆதரவற்ற சேகருக்கு ஆதரவாக ஆடுகள் மற்றும் நாய் குட்டிகள் மட்டுமே துணையாக இருந்து வருகிறது. இவை ஆடு, நாய் என்ற வேறுபாடு இன்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறது. தற்போது அவர் வீட்டில் ஆடு மற்றும் நாய் உள்ளகட்டவை குட்டிகளை ஈன்று உள்ளது.

இதில் அதிசயம் என்னவென்றால் ஆடுகளுக்கு நாய் என்றால் பயம். ஆடுகள் ஒருபோதும் நாயை தனது அருகில் அண்டவே விடாது தள்ளிவிடும். அல்லது ஆடுகள் பயந்து ஓடிவிடும். அதிகமாக பல்வேறு கிராமங்களில் நாய்கள் ஆடுகளை கொன்று தின்ற செய்தி நாம் கேள்விப்பட்டது உண்டு. ஆனால் சேகர் வீட்டில் ஆடுகளும் நாய்களும் ஒன்றாகவே படுத்து உறங்கி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க ஆடுகள் தங்கள் குட்டிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் சிங்கம் போல் பாய்ந்து முட்டும். ஆனால் ஆடுகள் ஒருபுறம் தனது குட்டிகளுக்கு பால் கொடுக்க நாய் ஒருபுறம் பால் கொடுத்து வருகிறது. இது பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாய், பூனை, எலி என ஒவ்வொரு ஜீவ ராசிகளும் அருகில் மற்ற ஜீவ ராசிகள் வந்தாலே சண்டை போடும். ஆனால் தனது பாலை ஆட்டுக்குட்டிக்கு உணவாக நாய் கொடுப்பது ஆச்சரியமாகவும், அதியசாமகவும் உள்ளது. ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் அதிசயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். மனிதர்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலையில் விலங்கினத்தின் தாய் பாசத்தை காண்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Related Stories: