அனைவரையும் கவரும் வகையில் விநாயக சாகர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-திருப்பதி ஆணையாளர் உத்தரவு

திருப்பதி : அனைவரையும் கவரும் வகையில் திருப்பதி விநாயக சாகர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணையாளர் அனுபமா அஞ்சலி உத்தரவிட்டுள்ளார்.  

திருப்பதி விநாயக சாகர் ஏரியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி பொறியியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: திருப்பதி நகரமே செழிப்பை ஏற்படுத்தும் வகையில் புனரமைக்கப்படும். விநாயக சாகர், மாநகர மக்கள் மட்டுமின்றி பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சீரமைக்கப்படும். முழு விநாயக சாகரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும். விநாயக சாகர் பணிகளை விரைவில் முடிக்க பார்வையாளர்கள் மற்றும் பலர் நியமிக்கப்பட வேண்டும். சங்கராந்தியின் போது  இறுதி வடிவம் பெற வேண்டும்.

அனைவரையும் கவரும் வகையில் விநாயக சாகர் கரையில் அழகான மரங்கள் அமைக்க வேண்டும். மேலும், சாகர் கரையை சுற்றியுள்ள பகுதிகளை சமன் செய்து, மரங்கள் மற்றும் பச்சை புல் கொண்ட புல்வெளி அமைக்க வேண்டும். சுற்றிலும் விளக்கு அமைக்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயக சாகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்களை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: