×

சென்னை காந்தி மண்டபம் திறந்தவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வாடகை நிர்ணயம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் கிண்டி காந்தி மண்டபம் செயல்பட்டு வருகிறது. இவ்வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் பல்கலைக்கழக விழாக்கள் பட்டமளிப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகள், அரிமா சங்க நிகழ்ச்சிகள், சுழற் சங்க நிகழ்ச்சிகள், பள்ளிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், காந்திய நிறுவனங்களுக்கான இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வாடகை கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன் விவரம்

* பல்கலைக்கழக விழாக்கள் பட்டமளிப்பு மற்றும் பிற நிகழ்வுகள் நடந்த  ரூ.17,500 என்ற தொகையை வாடகையாக நிர்ணயித்துள்ளது.

* கல்லூரி நிகழ்ச்சிகள், அரிமா சங்கம், சுழற் சங்கம், (மதச்சார்பற்றவை) போன்ற நிகழ்ச்சிகளுக்கு .17,500 என்ற தொகையை நிர்ணயித்துள்ளது.

* பள்ளிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு குறைந்த வாடகை ரூ.12,500 என்ற தொகையை நிர்ணயம் செய்துள்ளது.

* காந்திய நிறுவனங்களுக்கான, காந்திய கல்விக்கான இளைஞர் அமைப்பு  நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு  ரூ.6,000 தொகையை கட்டணமாக அறிவித்துள்ளது.

அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு, நிகழ்ச்சி நடத்துபவர்கள்,காந்தி மண்டபம் திறந்த வெளி அரங்கத்தினை பயன்படுத்திக் கொள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், இராஜாஜி மண்டபம், சென்னை-2 என்ற முகவரியிலும், 9498042415 என்ற  என்னிலும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Chennai Gandhi Mandapam ,Tamil Nadu Government , Fixation of rent for holding various programs at Gandhi Mandapam, Chennai: Tamil Nadu Govt
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...