திருச்செந்தூர் கோயில் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!

மதுரை: ரூ.100 கோடி மதிப்புள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் அருகே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நிலங்களை அக்கிரமித்துள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு  தருமபுரம் ஆதீன மட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த மார்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் அந்த வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்த நிலத்தின் மதிப்பு தற்போது சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த இடத்திற்கு 1970-க்கு முன்னாள் மாத வாடகை அல்லது வருடாந்திர வாடகை தருமபுர ஆதின மடத்துக்கு செலுத்தி வந்தனர். அனால் தற்போது அவர்கள் அந்த இடங்களுக்கு வாடகை செலுத்துவதை நிறுத்தியதுடன், போலி பத்திரங்கள் தயாரித்து, ஆவணங்களும் மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக அகற்றவேண்டும், மேலும் இந்த நிலங்கள் அனைத்தையும் தருமபுரம் ஆதீன நிர்வாகத்திடம் வழங்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடவேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன் அமர்வில் விசரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் கோயில் நிவாக இணை ஆணையர் நேரில் ஆஜராகி ஆக்கிரமிப்பு நிலங்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்தார். அதேபோல் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி அந்த நிலங்களுடைய ஆவணங்கள், வரைபடங்களை தக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் உடனடியாக ஆக்கிரமிப்புகளாய் அகற்றவேண்டும், அந்த ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையம் உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் இவ்வாறு மீட்கப்படும் நிலங்களை தருமபுரம் ஆதீன நிவாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: