ரூ.12.79 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் ஏலம்

கொடுமுடி : கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ரூ. 12,79,640க்கு ஏலம் போனது. கொடுமுடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 75 க்கும் மேற்பட்ட விவசாயிகள் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், தேங்காய் காய்கள் 6940 வரத்தாகின. எடை 24.77 ½ குவி., மதிப்பு ரூ. 59,024. இது கிலோ ஒன்றுக்கு குறைந்தவிலையாக ரூ. 21.65 க்கும், அதிகவிலையாக ரூ. 26.65 க்கும், சராசரிவிலையாக ரூ. 24.65 க்கும் ஏலம் போனது.

 கொப்பரை தேங்காய் மூட்டைகள் 170 வரத்தாகின. எடை 79.32 குவி., மதிப்பு ரூ. 6,81,512. இதில், கிலோ ஒன்றுக்கு முதல்தரம் குறைந்தவிலையாக ரூ. 84.89 க்கும், அதிகவிலையாக ரூ. 92.80 க்கும், சராசரிவிலையாக ரூ. 91.60 க்கும் ஏலம் போனது. இரண்டாம்தரம் குறைந்தவிலையாக ரூ. 64.79 க்கும், அதிகவிலையாக ரூ. 86.86 க்கும், சராசரிவிலையாக ரூ. 78.80 க்கும் ஏலம் போனது.

 எள் மூட்டைகள் 56 வரத்தாகின. எடை 41.21 குவி., மதிப்பு ரூ. 5,39,104.  இதில், கிலோ ஒன்றுக்கு சிவப்பு எள் குறைந்தவிலையாக ரூ. 116.78 க்கும், அதிகவிலையாக ரூ. 134.90 க்கும், சராசரிவிலையாக ரூ. 127.90 க்கும் ஏலம் போனது. வெள்ளை எள் குறைந்தவிலையாக ரூ. 133.30 க்கும், அதிகவிலையாக ரூ. 139.10 க்கும், சராசரிவிலையாக ரூ. 136.60 க்கும் ஏலம் போனது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா முன்னிலையில் மொத்தம் 12,79,640 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

Related Stories: