×

நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் 27 உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் 27 உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.     தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  இன்று 7.12.2022 தலைமைச் செயலகத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும்  நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
    
மாவட்ட அலுவலகங்களில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களால் முழுமைத்திட்டப்பணிகள், விரிவு அபிவிருத்தி திட்டப் பணிகள்,  குடியிருப்பு மற்றும் வணிக அபிவிருத்திகளுக்கு திட்ட அனுமதி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஊரமைப்பு இயக்கக உதவி இயக்குநர் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில், 27 உதவி இயக்குநர் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  

2009 ஆம் ஆண்டுக்குப்பின்னர் தற்போது 27 உதவி இயக்குநர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றது. இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப, நகர் ஊரமைப்பு இயக்குநர்  பா.கணேசன், இ.ஆ.ப.,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,M. K. Stalin ,Urban Development Directorate , Directorate of Urban Development, 27 Assistant Director, post, appointment order, Chief Minister M.K.Stalin.
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...