ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு..!

டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% ரிசர்வ் வங்கி உயர்த்தியது. ரிசர்வ் வங்கி 2 ஆண்டுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்கிறது. எந்த வகையில் கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதிவரை நிதிக் கொள்கை சீராய்வு கூட்டம் நடந்தது. இதில் நாட்டின் பணவீக்கம் உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்; வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% ரிசர்வ் வங்கி உயர்த்தியது.

வட்டி விகிதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25% ஆக அதிகரித்துள்ளது. வட்டி விகித உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டில் பண வீக்கம் அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும். இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்புத்திறன் கொண்டதாகவே உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரின் விளைவாக சர்வதேச விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என கூறினார்.

Related Stories: