பிளஸ் 2 மாணவருக்கு கத்திக்குத்து: சக மாணவர் கைது

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 48 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பொறியியல் பிரிவில் படித்து வரும் 2 மாணவர்களுக்கு இடையே புத்தகம் மாயமானது தொடர்பாக அவர்களுக்குள் தாக்கி கொண்டதால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று களக்காடு அடுத்த கிராமத்தைச் சேர்ந்த மாணவரது முதுகில் கத்தியால் குத்தி விட்டு தப்பினார். காயமடைந்த மாணவரை ஆசிரியர்களும், மாணவர்களும் மீட்டு, நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிந்து, கத்தியால் குத்திய மாணவரை கைது  செய்தனர்.

Related Stories: