×

மதுரவாயல் உயர்மட்ட சாலையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: விக்கிரமராஜா மனு

சென்னை: மதுரவாயல் -துறைமுகம் உயர்மட்ட சாலையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏ.எம்.விக்கிரமராஜா மனு அளித்துள்ளார். சென்னை, மதுரவாயல் -துறைமுகம் உயர்மட்ட சாலையினால் பாதிக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை வாகன உதிரிபாக முன்தொகை செலுத்திய வியாபாரிகள் அனைவருக்கும் அரசினால் அறிவிக்கப்பட்ட ஆட்டோ நகர் பேஸ்-2, செங்கல்பட்டு, ஆப்பூரில் ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட வணிக மனைகளை உடனடியாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மனு அளித்தார்.

அப்போது, பேரமைப்பின் தலைமை செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, என்.உசேன்சேட், ஹாஜி எஸ்.யு.சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், உடனடியாக கடைகள் ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.


Tags : Maduravayal ,Wickramaraja Manu , Shops should be reserved for traders affected by Maduravayal high-level road: Wickramaraja Manu
× RELATED மதுரவாயலில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்